மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 136ஆவது ஜனன தின நிகழ்வு

Report Print Sumi in சமூகம்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 136ஆவது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ். நல்லூர் அரசடி சந்தியிலுள்ள பாரதியாரின் உருவச்சிலைக்கு முன்பாக, இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 136ஆவது ஜனன தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு யாழ். இந்திய உயர்ஸ்தானிகர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிரதம அதிதிகளினால் பாரதியாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் பாரதியார் பாடல்களும் இசைக்கப்பட்டுள்ளன.

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வடமாகாணசபையின் முன்னாள் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் சர்வ மத தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.