கைத் தொலைபேசி களவாடப்பட்டால் கவலை வேண்டாம்! இலங்கையர்களுக்கானது

Report Print Jeslin Jeslin in சமூகம்

கைத்தொலைபேசிகள் காணாமல் போனால் அல்லது களவாடப்பட்டால் அது குறித்து உடனடியாக முறையிடுவதற்கு பொலிஸார் விசேட இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

www.ineed.police.lk என்ற முகவரியில் இந்த இணையத்தளம் இயங்குகிறது.

இந்த இணையத்தளத்தை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆரம்பித்து வைத்ததாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைத் தொலைபேசிகள் காணாமல் போனப் பின்னர் அல்லது களவாடப்பட்டால், உடனடியாக இதில் முறைப்பாடு செய்ய முடியும்.

பின்னர் குறித்த முறைப்பாடு உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.