வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: 3 பேர் காயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இரு வாகனங்கள் விபத்திற்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் பாலத்திற்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் காயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார் வீதி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரு தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களுடன் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு பாலத்திற்குள் பாய்ந்துள்ளது.

மற்றைய மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியாமல் கீழே வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

இதையடுத்து காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers