சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விசேட கெளரவிப்பு நிகழ்வு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

சர்வதேச மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை கெளரவப்படுதும் முகமாக கெளரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வை கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களமும், கிண்ணியா பிரதேச செயலகமும் இணைந்து இன்று கிண்ணியா எகுத்தார் வித்தியாலத்தில் நடத்தியுள்ளது.

இதில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் என்.மதிவண்ணன், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவை திணைக்கள செயலாளர் எம்.சீ.எம்.அன்ஸார், கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் பங்குபற்றிய விஷேட தேவையுடையவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விஷேட தேவையுடைவர்களுக்கு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள் என்பன வழங்கப்பட்டதோடு மாவட்டத்தில் இசை துறையில் திறமை காட்டிய முதியோர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் திறமையாக சேவையாற்றிய சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கு ஞாபக சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.