ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க கோரி கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மதியம் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

7ஆவது நாளாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடும் இவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலம் நடத்தியுள்ளனர்.

உரிய முறையில் முதலாளிமார் சம்மேளனத்துடன், தொழிற்சங்கங்கள் பேச்சுவாரத்தை நடத்தி ஜனவரி மாதத்திற்கு முன்பதாக தோட்ட தொழிலாளர்களுக்கு இம்முறை நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டுமெனவும், எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று தரவேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 350இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.