பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி மூன்று கிராம மக்கள் தீர்வினை பெற்றுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா, ஏ9 வீதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது.

வீட்டுத்திட்டம், காணிப் பிரச்சினை, வாழ்வாதாரம் மற்றும் நிவாரணம் வழங்கப்படாமை போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி பாரதிபுரம் விக்ஸ் கிராமம், ஈஸ்வரிபுரம் மற்றும் கந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியாவில் ஜனநாயகத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாதிப்பிற்கு மீள் கட்டுமானமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள் கட்டுமானமா?, நல்லாட்சி ஏற்பட்டு மூன்றரை வருடங்களாகியும் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை, காணிகளுக்கு உரிமை மறுப்பது மனித உரிமை மீறல், வழங்கு, வழங்கு காணிகளை வழங்கு, நல்லாட்சியை ஏற்படுத்திய தமிழ் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பிரதம கணக்காளர் எஸ்.பாலகுமாரனிடம் கையளிக்குமாறு மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers