சர்வ மதத் தலைவர்களுடனான சமய நல்லிணக்கப் பயணம் காலி மாவட்டத்தில்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள் காலி மாவட்டத்துக்கு சென்று மதஸ் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டுள்ளனர்.

குறித்த விஜயம் இன்று சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமாதானம், நல்லிணக்கம், புரிந்துனர்வு, பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு பயணமாகவும் இது கருதப்படுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

பௌத்தம், இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் காலி மாவட்டத்தில் உள்ள கதிரேசன் கோயில், காலி கோட்டை, சமாதான இணக்க பாகொட பௌத்த விகாரை, முஸ்லீம் பள்ளிவாயல் காலி சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானம் போன்ற இடங்களை தரிசித்துள்ளனர்.

இதன் போது ஒன்று கூடல் ஒன்றையும், மத கலாசார விழுமியங்களையும் மூவினங்களை சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பும் கிட்டியமை குறிப்பிடத்தக்கது.

தேசியம் தொடக்கம் சர்வதேசத்துக்கு ஒரு முன்னுதாரணமாக சர்வமதத் தலைவர்களின் சமய நல்லிணக்கப் பயணம் எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

இதில் நிறுவன திட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.றிஸ்மி, காலி மாவட்ட நிறுவன முகாமையாளர் எம்.என்.ஈ.ஒஸ்டின் பெரேரா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.