வவுனியாவில் கஞ்சா கடத்தியவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்தில் 700 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் பொலிஸார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது, யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 33 வயதுடைய வாரியபொல பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Offers