சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது: தீவிர விசாரணை

Report Print Theesan in சமூகம்

வவுனியா, செக்கட்டிப்பிலவு பகுதியில் வீட்டில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் சட்டவிரோத 25 கசிப்பு போத்தல்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா செக்கட்டிப்பிலவு, பம்பைமடு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த 750மில்லி லீற்றர் 25 சட்டவிரோத கசிப்புப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

33 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.