பொலிஸார் கைது செய்த சந்தேக நபர் மரணம்

Report Print Manju in சமூகம்

தும்மலசூரிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இறந்துள்ளார்.

உடுபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு வரும் வழியில் மயக்கடைத்தார். இந்நிலையில் பொலிஸார் குறித்த சந்தேக நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுபத்தாவ மஹாரா பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதான சந்தேக நபர் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மரணமடைந்த சந்தேகநபரின் பிரேத பரிசோதனைகள் இன்று இடமபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.