போதைப்பொருள் பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவரை மக்கள் பிடித்துள்ளனர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

போதைப்பொருள் பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவரை சீருடையுடன் பிடித்து பொதுமக்கள் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது, இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைரவபுளியங்குளம் நெல் களஞ்சியசாலையில் யாருமற்ற நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சீருடையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதையடுத்து அவ்விடத்திற்கு சென்ற ஒருவர் குறித்த பொலிஸ் அதிகாரி போதைப் பொருள் பயன்படுத்தி கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த பொலிஸ் அதிகாரியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அத்துடன், பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் தொடர்பிலும் பொலிஸ் தகவல்களை திரட்டியுள்ளனர்.