இராணுவ சிப்பாய் ஒருவரின் வீட்டில் கசிப்பு நிலையம்: மூவர் கைது

Report Print Mubarak in சமூகம்

அனுராதபுரம் இபலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிபிட்டியாகம பிரதேசத்தில் இராணுவ சிப்பாய் ஒருவரின் வீடொன்றிலே நடாத்திச் செல்லப்பட்ட கசிப்பு தயாரிப்பு நிலையமொன்றை முற்றுகையிட்டு மூவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23, 31 மற்றும் 27 வயதுடைய மூவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் ஒரே தடவையில் ஆறு கோடா தாங்கிகளை கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தியுள்ளதுடன் அவைகள் ஊடாக துர்நாற்றம் ஏற்படாத வகையில் தொழில்நுட்ப வியூகங்களை சந்தேக நபர்கள் கையாண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் கசிப்பு தயாரிப்பதற்கு உபயோகித்து வந்த வீடு இராணுவ சிப்பாய் ஒருவருக்குரியது என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.