சமய நல்லிணக்கத்தை சர்வமத தலைவர்கள் ஊடாக ஏற்படுத்த முடியும்!

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கை நாட்டில் மூவினங்களுக்குள் சர்வ மதங்கள் ஊடாக சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என காலி கன்னம்பிட்டிய பௌத்த விகாரையின் விகாராதிபதி கேகல்ல யூ பன்ஞராம தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட சர்வமத தலைவர்களுடனான இன்று காலி கன்னம்பிட்டிய விகாரையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சமய நல்லிணக்கத்தையே நாங்கள் விரும்புகிறோம் ஒவ்வொரு மதமும் நல்ல விடயங்களையே போதனைகளாக தங்களது மதங்கள் ஊடாக சொல்கிறது .

சமாதானத்தை நிலை நாட்ட தெற்கு மாகாணத்தில் மாத்திரமல்ல, வட கிழக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சர்வ மத கலந்துரையாடல்களில் ஈடுபடுகிறேன்.

யுத்த காலங்களில் இருந்து திருகோணமலை மாவட்டம் போன்ற பிரதேசங்களில் களவிஜயம் செய்து சமய பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளை சர்வமத தலைவர்களுடன் சேர்ந்து தீர்வை முன்னெடுத்திருக்கிறோம்.

மூவின மக்களும் சமாதானமாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் இவ்வாறான சர்வமத தலைவர்கள் இதற்காக பூரண ஒத்துழைப்புக்களுடன் செயற்பட முன்வருவார்கள் என நம்புகிறேன் என்றார்.

Latest Offers