வவுனியா இ.போ.சபை பேருந்துகளினால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு நேர அட்டவணைக்கு ஏற்ப வந்து செல்லாமையால் சீரான சேவையை வழங்க முடியாதுள்ளதாக வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் இ.ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து 3 நிமிடம் தரித்து செல்ல எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கடந்த சனிக்கிழமை பழைய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இருப்பினும் முன்னர் இடம்பெற்றதைப் போன்று தூர இட பேருந்துகள் பயணிகளை பழைய பேருந்து நிலையத்தில் இறக்கி, ஏற்றுகிற போது உள்ளூர் சேவைகள் நீண்ட நேரம் நேர அட்டவணைக்கு ஏற்ப வந்து செல்லவில்லை.

அத்துடன் பழைய பேருந்து நிலையத்தில் நேரக்கணிப்பாளர்களும் கடமையில் நிறுத்தப்படவில்லை. இதன்காரணமாகவே தனியார் பேருந்துகள் சீராக பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் இ.ராஜேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.