வாகன விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்றில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்று மாலை மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்திலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த மஹ்ரூப் மஹ்சூம் 25 வயதுடைய இளைஞயொருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த டிப்பர் சராதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அப்பிரதேச மக்கள் வீதியில் கட்டைகளை இட்டு போக்குவரத்துக்கு தடங்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே குறித்த டிப்பர் வாகனம் வீதியில் சென்ற இளைஞன் மீது மோதியுள்ளதாகவும், விபத்தில் சிக்கிய நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த டிப்பர் வாகன சாரதியை கைது செய்ததுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers