மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏக மனதாக நிறைவேற்றம்

Report Print Mubarak in சமூகம்

மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஜாஹிரின் ஆலுமையால் 2019ஆம் ஆண்டுக்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏக மனதாக இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

21 உறுப்பினர்களை கொண்ட மன்னார் பிரதேச சபையில் இன்றைய அமர்வில் பங்கு கொண்ட 20 உறுப்பினர்களும் சபை முதல்வர் முஜாஹிரினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியமை சிறப்பம்சமாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம் உள்ள மன்னார் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஜன நாயகத்தை பாதுகாக்க தேசிய ரீதியில் சிறுபான்மை கட்சிகள் ஒன்று பட்டு செயற்படுவதை இன்றைய மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறை வேற்றப்பட்டதிலும் அவதானிக்க முடிந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு வாக்கு மாத்திரம் எதிராக வாக்களித்துள்ளதோடு இருபது வாக்குகளினால் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.