மலையக அரசியல் வாதிகளால் பூசப்படும் மேற்பூசல்!

Report Print Nivetha in சமூகம்

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் போக்குவரத்துக்கு பெரும் பங்குண்டு. அந்தவகையில் மலையகத்தின் காணப்படும் சில வீதிகள் அபிவிருத்தி செய்யபட்டிருப்பதாக காட்சி தந்தாலும் உட்சென்று பார்ப்பவருக்கு அது வெறும் கானல் நீரே.

மலையகத்தின் பல பகுதிகளின் வீதிகள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு முற்றும் முழுதாக அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதாக மலையக அரசியல் தலைகளால் சித்தரித்துக்காட்டப்படுகிறது.

எனினும், நிலைமை வேறு. அந்த வகையில் பத்தனை ஸ்ரீபாதை கல்வியல் கல்லூரிக்கு செல்லும் பாதையானது மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது.

இது கற்ற சமூகத்தினரும் உயர் அதிகாரிகளுக்கும் செல்வதால் என்னவோ இவ்வாறு மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது .

இது மலையக புத்தி ஜீவிகளை தன் கைக்குள் போட்டு கொள்வதுடன் அவர்களின் விமர்சனத்தையும் தனக்கு சாதகமாக மாற்றி கொள்வதற்காகவே என்பதை உறுதி செய்கின்றது.

ஸ்ரீபாத கல்லூரி வரை நேர்த்தியாக காணப்படும் இவ்வீதி உட்செல்லும் போது மீன் வளர்க்க ஏதுவான சிறு சிறு குளங்கள் தோண்றியது போல காணப்படுகின்றது.

இராணியப்பு வீதியானது குன்றும் குழியுமாக காணப்படுவதால் வாகன சாரதிகள் , பாடசாலை மாணவர்கள் , நோயாளர்கள் பெறும் சிரமத்தை எதிர் கொள்வதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

Latest Offers