ஆலமரம் முறிந்து விழுந்ததில் பிரதான வீதி போக்குவரத்துத் தடை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, சிலாவத்தைப் பிரதான வீதியில் 75 வருடம் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

சிலாவத்தை பிரதான வீதியோரத்தில் காணப்படும் இந்த பெரிய ஆலமரம் நேற்று இரவு வீதியை குறுக்கருத்து முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் முல்லைத்தீவு - திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அங்கு சென்ற வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் முறிந்து விழுந்த ஆலமரத்தை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.