வாகன விற்பனையில் 16 இலட்சம் ரூபாவை மோசடி செய்த வாகன உரிமையாளரை ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருகோணமலை - கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் வாகன விற்பனையின் போது கந்தளாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 16 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த நபரை ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 27 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.