கைவிடப்பட்டுள்ளதா மரபுரிமை மையத்திற்கான வேலைத்திட்டம்? பொது மக்கள் கடும் விசனம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் பகுதியில் அமையப்பெறவுள்ள மரபுரிமை மையத்திற்கான எவ்வளவு நிதிதேவையென்பதை மதிப்பிட்டு அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில் குறித்த மரபுரிமை மையத்தினை அமைக்கமுடியும் என்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

மாங்குளம் - வெள்ளாங்குளம் வீதியின் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில் மரபுரிமை மையம் அமைப்பதற்கான காணி தெரிவு செய்யப்பட்டு அதற்கான துப்பரவுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

குறித்த காணியில் நினைவுக்கல் ஒன்றும் வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைவதற்கு ஒரு வார காலத்தற்கு முன்னர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் திரைநீக்கம்செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அந்த இடம் கால்நடைகளின் உறைவிடமாகக்காணப்படுகின்றது.

இலங்கைத்தீவிலே தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை காட்சிப்படுத்தும் ஓர் இடமாக இது அமையும் எனக்குறிபபிட்டு முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சரால் அவரது ஆளுகைக்குட்பட்ட பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஊடாக இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதற்கான சுற்றுவேலிகள் அமைக்கப்படாது இப்போது கால்நடைகளின் உறைவிடமாக காணப்படுகிறது.

தமிழர் வாழ்வியலையும் அவர் தம் மரபுரிமைகளையும் பேணிக்காக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்ட்ட இந்த வேலைத்திட்டம் இவ்வாறு கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விபண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது,

குறித்த இடத்தில் நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப வேலைகளில் ஒன்றாகும். மிகுதி வேலைகளை முன்னெடுப்பதற்கான நிதி மதிப்பீடு செய்யப்பட்டு திட்டமிடப்படவேண்டும்

இவ்வாறான விடயங்கள் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. இந்த மரபுரிமை மையத்தினை அமைப்பதற்கு ஐநு;து வருட காலம் எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுளளார்.

Latest Offers