வவுனியாவில் இலவச மருத்துவ முகாம் முன்னெடுப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இலவச மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா - வைரவ புளியங்குளம், கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் இன்று காலை முதல் மாலை வரை இம்முகாம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா தமிழ் விருட்சம் மற்றும் விண்மீன்கள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இம்மருத்துவ முகாமில் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 6 வைத்தியர் குழாம் நரம்பு, எலும்பு, தசைக்கான மசாஜ் வைத்தியத்தினை நோயாளர்களுக்கு மேற்கொண்டு ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான வைத்திய சிகிச்சை நிலையங்கள் கணிசமானளவு காணப்படவில்லை எனினும் இன்றைய இலவச மருத்துவ முகாமில் வயது வேறுபாடு இன்றி பெருமளவனோர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், விண்மீன் அமைப்பின் தலைவர் புவிகரன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச மருத்துவ முகாமினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

Latest Offers