மட்டக்களப்பில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன், நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியில் இருந்து அக்கரைப்பற்றுக்கு கொண்டுசென்ற சொகுசு வானிலேயே இந்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சொகுசு வானில் மிகவும் இரகசியமான முறையில் குறித்த கேரளா கஞ்சா மறைத்துகொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு மற்றும் கிரான்குளம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் சைகையினை மீறிச்சென்ற நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை வழிமறிக்கப்பட்டு குறித்த வான் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வானில் இரண்டு பொதிசெய்யப்பட்ட சுமார் ஐந்து கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வான் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers