யாழில் சட்டவிரோதமாக கடல் ஆமை பிடித்த நால்வர் கைது

Report Print Sumi in சமூகம்

யாழில் சட்டவிரோதமாக கடல் ஆமை பிடித்த நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து ஐந்து ஆமைகளை யாழ். கடற் தொழில் நீரியல் வள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

யாழ். குருநகர் பகுதியில் வைத்து அப்பகுதியைச்சேர்ந்த இரண்டு மீனவர்கள் மூன்று ஆமைகளுடனும் நெடுந்தீவு பகுதியில் வைத்து இருவர் இரண்டு ஆமைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வருக்கெதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஆமைகளை மீண்டும் கடற்பரப்பில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.