திருகோணமலை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விஷேட சுற்றிவளைப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களில் விஷேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிராந்திய உணவு மருந்து பரிசோதனை பிரிவினர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.கயல்விழியின் வழி காட்டலின் கீழ் இச்சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல, வெருகல் போன்ற பிரதேசங்களில் அனைத்து உணவு கையாளும் நிறுவனங்களும் பரிசீலனை செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் மாவட்டத்தில் அனைத்து ஹோட்டல்கள், வீதி நடமாடும் கடைகள், உணவு உற்பத்தி நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் உணவகங்களில் ஏதாவது குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் காணப்பட்டால் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.