மின்சார சபை ஊழியர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய உரிமையாளர் ஒருவரை இன்று(12) கைது செய்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்குள்ளான ஊழியர்கள் இருவரும் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது, உணவகத்தின் மின்சார நிலுவைக் கட்டணம் செலுத்த தவறியமையினால் மின் இணைப்பினை துண்டிப்பதற்காக கெக்கிராவ மின்சார அலுவலகத்திலிருந்து சென்ற ஊழியர்கள் இருவரே உணவக உரிமையாளரினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.