மட்டக்களப்பில் பாரிய விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

Report Print Nesan Nesan in சமூகம்

மட்டக்களப்பு - தந்தை செல்வா திருவுருவம் சிலைக்கு முன்பாக பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

குறித்த பகுதியில் இன்று பிற்பகல் தனியார் பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தெய்வாதீனமாக மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இதன் போது முச்சக்கர வண்டி தனியார் பேருந்தின் கீழ் பக்கமாக சிக்குண்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் இவ்விபத்தின் பின்னர் தனியார் பேருந்து சாரதிக்கும் பொதுமக்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

Latest Offers