விவசாய விளை திறனை அதிகரிப்பதற்கான விவசாய கண்காட்சி

Report Print Vamathevan in சமூகம்

விவசாய விளை திறனை அதிகரிப்பதற்கும் உற்பத்தி செலவை குறைத்து நேரடி சந்தை வாய்ப்பினையும் இலவசமாக விவசாயிகளுக்கு நவீன உபகரணங்களையும் பெற்றுக்கொள்வதற்கு கமத்தொழில் அமைச்சினால் “விவசாய நவீனமயமாக்கல் திட்டம்” நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

கொழும்பில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட விவசாய கண்காட்சியானது எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நவீன விவசாய கலாச்சாரத்தினை நோக்கிய நகர்வு எனும் கருப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் விவசாய கண்காட்சியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.

நாடளாவிய ரீதியிலான உற்பத்தி பொருட்களையும், நவீன உபகரணங்களையும் பார்வையிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், நவீன கொள்கை மயமாக்கல் திட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

விவசாய விளை திறனை அதிகரிப்பதற்கும் உற்பத்தி செலவை குறைத்து நேரடி சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி விவசாய நவீன மயமாக்கல் திட்டமானது கமத்தொழில் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இலவசமாக விவசாயிகளுக்கு நவீன உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு கமத்தொழில் அமைச்சினால் இச் சிறந்த கொள்கை திட்டம் விவசாய பெருமக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.