மன்னார் நானாட்டானில் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் மிக பழமையானதும், இரண்டாவது பெரிய கோவிலாக உள்ள நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், நானாட்டான் பிரதேச சபை தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள், நானாட்டான், முசலி பிரதேச கடற்படை அதிகாரிகள், முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர்கள் மற்றும் சமயப் பெரியவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலயத்தின் இராஜகோபுரமானது சுமார் 2 கோடி 80 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.