நாட்டுக்கு சமாதானம் வேண்டி மகா கணபதி ஹோமம்

Report Print Kumar in சமூகம்

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா கணபதி ஹோமம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் சாந்தியும் சமாதானமும் ஏற்படவும் அனைவரும் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற்று வாழவும் இந்த கணபதி மகா ஹோமம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு இந்த மகா ஹோமம் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் பெருமளவான சிவாச்சாரியர்கள் இணைந்து நடாத்தினர்.

இதன்போது ஆயிரக்கணக்கான மூலிகைகள் கொண்டு மகா கணபதி ஹோமம் நடாத்தப்பட்டதுடன் மூலமூர்திக்கு விசேட அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன.

இந்த மகா கணபதி ஹோமத்தில் நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.