12 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சேருவில பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாக கூறி 12 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

சமகிபுர, தெஹிவத்தை, பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சந்தேக நபர் டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றிச் செல்வதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாக சேருவில மற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த நால்வரிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.

ஒவ்வொருவரிடமும் தலா மூன்று இலட்சம் ரூபா பெற்று தலைமறைவாகி உள்ளதாகவும் சந்தேக நபரை பணம் வழங்கிய உரிமையாளர்கள் பல தடவைகள் தொடர்பு கொண்டும் அலைபேசி செயழிலந்து காணப்பட்டதாகவும் பின்பு நால்வரும் கந்தளாய், மற்றும் சேருவில பொலிஸ் நிலையங்களில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்து சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.