சபரிவாசன் தீர்த்தயாத்திரை குழுவினரால் உதவித்திட்டம் வழங்கி வைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா தச்சனாமருதங்குளம் மயானத்திற்கருகில் மெ.கந்தசாமி நீண்ட காலமாக குடும்பத்தினருடன் சிறு குடிசையில் வசித்து வருகின்றார்.

தச்சுத்தொழிலை செய்து அதன் மூலம் வரும் பணத்தில் குடும்பத்தை கொண்டு செல்லும் இவருக்கு இதுவரை அரசானாலும் மக்கள் பிரதிநிதிகளினாலும் எவ்வித உதவிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் மூத்த மகள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவரின் மருத்துவ செலவு மற்றும் மகளின் நான்கு பிள்ளைகளையும் கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் பலரிடமும் இவரினால் உதவி கேட்கப்பட்டும் எந்த பயனுமில்லாத நிலையில் வவுனியா வேப்பங்குளம் சபரிவாசன் யாத்திரை குழுவினரிடம் தனது நிலையை தெரிவித்திருந்தார்.

இதற்கமைய சபரிவாசன் யாத்திரை குழுவினரினால் இன்று இக்குடும்பத்தின் உடனடி தேவையாக காணப்பட்ட வீட்டு கூரைக்கான பொருட்கள் முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டது.