பளை பிரதேச வைத்தியசாலையில் கட்டப்பட்ட கட்டடதொகுதிகள் திறந்து வைக்கப்பு

Report Print Yathu in சமூகம்

பளை வைத்தியசாலையில் புதிதாகக்கட்டப்பட்ட கட்டடதொகுதிகளை இன்று முன்னாள் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது பளை வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நுழைவுவாயில் கட்டடதொகுதி மற்றும் சிற்றூன்டிச்சாலை மற்றும் வாகனதரிப்பிட கட்டடதொகுதி , வைத்தியசாலைக்குல் அவசரசிகிச்சை வாகனம் செல்வதற்கான கொங்கிறிற் பாதை என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் மற்றும் பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி சிவரூபன் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பொதுமக்கள் மற்றும் பளை வைத்தியசாலைக்கு சின்றூண்டிசாலை அமைத்து கொடுத்த பளை ஸ்ரீபதி விளையாட்டுக்கழக இளைஞர்கள் கலந்துகொண்டர்.