போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை வரமுற்பட்டவருக்கு ஏற்பட்ட நிலை!

Report Print Murali Murali in சமூகம்

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வரமுற்பட்ட ஒருவர் மதுரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று மாலை மதுரை விமானநிலையத்திலிருந்து இலங்கை வரமுற்பட்ட போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கைக்கு வந்து, இலங்கையிலிருந்து குவைத்த செல்ல திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விமானநிலைய அதிகாரிகள் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பெருங்குடி பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.