மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தற்காலிகமாக இடை நிறுத்தம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் கடந்த புதன்கிழமை 116ஆவது நாளாக இடம்பெற்றிருந்து.

இந்த நிலையில் அதன் பின்னர் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவருகிறது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ளமையினாலேயே இவ்வாறு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை அகழ்வு பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த புதைகுழியில் இதுவரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை 'காபன்' பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.