யாழில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். வரணி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் 6 பவுண் நகை மற்றும் 35,000 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வரணி, இயற்றாலை பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்குள் நேற்று அதிகாலை முகங்களை மூடியவாறு நால்வர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது.

அந்த குழு, வீட்டில் இருந்த தம்பதியினரை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது 06 பவுண் நகை, 35000 ரூபாய் பணம், விலை உயர்ந்த கையடக்க தொலைபேசி, காணி உறுதிகள், ஆடைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.