காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு!

Report Print Thileepan Thileepan in சமூகம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று மாலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் குறித்து எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வரையும் அம்முறைப்பாட்டிற்கு எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை.

எற்கனவே எங்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் அதற்கு பதிலளிக்குமாறு தெரிவித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக கோரிக்கை ஒன்றை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கையளித்திருந்தனர்.

வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரி எம். றோகித பிரியதர்சன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

“எங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்களாகியும் மனித உரிமைகள் ஆணையம் பதில் வழங்கவில்லை.

இன்று எல்லாரும் இணைந்து முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளோம் எங்களுக்கு பதில் வழங்கப்படவேண்டும்” என தெரிவித்தனர்.

Latest Offers