கிளிநொச்சியில் மிகவும் உணர்வு பூர்வமாக அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் அனுஸ்டிப்பு!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில்; அரசியல் ஆலேசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு இன்று(14-12-2018)பிற்பகல் நடைபெற்றுள்ளது.

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்து சுகயீனம் காரணமாக உயிரிழந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு இன்று (14-12-2018) பிற்பகல் 3.மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கலைவாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்குமாகா சபையின் அவைத் தலைவர் சீ.வீ. கே சிவஞானம் ஊடகவியலாளர் வித்தியாதரன் ஆகியோர் நிணைவுரைகளையாற்றினர்.

இன்நிகழ்வில் முன்னாள் மாகான சபைஉறுப்பினர்களான சு. பசுபதிப்பிள்ளை த.குருகுல ராஜா கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சியின் செயற் பாட்டாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers