பல லட்சம் ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயினுடன் கொழும்பில் இருவர் கைது!

Report Print Murali Murali in சமூகம்

நுகேகொட, பாகொட வீதியில் வைத்து பல லட்சம் ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் ஹெரோயினை எடுத்துச் செல்ல முற்பட்ட இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு கிலோ கிராம் பெறுமதியுடைய ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 12.1 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers