கடனை திரும்பிக் கொடுக்காமையால் வவுனியாவில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Report Print Thileepan Thileepan in சமூகம்

நம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமையால் மனவிரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியா பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் தனது நண்பர் ஒருவருக்கு குறிப்பிட்ட தொகை பணத்தை சில மாதங்களுக்கு முன்னர் கைமாற்றாக வழங்கியுள்ளார்.

அப்பணத்தை மீள தருமாறு கடந்த சில நாட்களாக கோரி வந்த நிலையில் பணத்தை கடனாக பெற்ற நண்பர் பணத்தை வழங்காது இழுதடிப்பு செய்துள்ளார்.

இதனால் பணம் கொடுத்த இளைஞர் மனவிரக்தியடைந்த நிலையில் நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் களைநாசினியை உட்கொண்டு ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

Latest Offers