கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கியமான அறிவித்தல்!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நள்ளிரவிலிருந்து (16) 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை நள்ளிரவு (16) (ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00) முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6.00 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

மொரகஸ்முல்ல, இராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் இராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதிகள் மற்றும் அதனுடன் இணைந்த உள் வீதிகளில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.