வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மல்லாவியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மாலை வவுனியா, பறநாட்டாங்கல் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து ஏ9 வீதியூடாக மல்லாவி நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிளும், யாழில் இருந்து ஏ9 வீதியூடாக சென்ற பட்டா ரக வாகனம் பறநாட்டாங்கல் பகுதிக்கு திரும்ப முற்பட்டவேளை மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த மல்லாவியைச் சேர்ந்த ந.வசந்தகுமார் (42 வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பட்டா வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.