வவுணதீவு கொலை யாருக்கு இலாபம்! மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - வவுணதீவில் இடம்பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலையினை கண்டித்தும் அவர்களின் படுகொலைக்கு நீதியான விசாரணைகளை கோரியும் மட்டக்களப்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி கலாச்சாரம் வேண்டாம், பயங்கரவாத அடக்குமுறை வேண்டாம், கொலைகளை தடுப்போம் அநீதிகளை வெறுப்போம் என்னும் கோசத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் நவரெட்னராஜா, கட்சியின் பொதுச் செயலாளர் வி.கமலதாஸ், ஊடகப்பேச்சாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.வசந்தகுமார் உட்பட கட்சி ஆதரவாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

புலி முகவர்களின் பொறிகளில் உங்கள் பிள்ளைகளை பறிகொடுக்காதீர்கள், வவுணதீவு கொலை யாருக்கு இலாபம், போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

Latest Offers

loading...