போராளிகள் மத்தியில் கருத்தியல் தாக்கம் ஏற்பட காரணம் அன்ரன் பாலசிங்கமே: சி.வி.கே

Report Print Dias Dias in சமூகம்

தங்களுக்கு ஏற்ற மாதிரி பேசக்கூடிய ஜீ.எல்.பீரிஸை சமஸ்டிக்கு உடன்பட வைத்த பெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு உண்டு என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார்.

வடக்கு கிழக்கிலே இருந்த போராளிகள் எங்களுடைய கருத்துக்களை, இலக்கியங்களை, நோக்கங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களை வெல்லக் கூடிய அளவிற்கு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கருத்தியல் தாக்கம் போராளிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது என்றார்.

Latest Offers

loading...