கிழக்கு மாகாணத்தில் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 125 குடும்பங்களுக்கு இன்று காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தியின் பக்கம் முன்னேற்றிச் செல்லும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் ஆலோசனையின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், முதலமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் வீடுகள் மற்றும் மலசலகூடங்கள் இல்லாமல் வறுமையில் வாழ்ந்துவரும் குடும்பங்களை தெரிவு செய்து அவர்களின் குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் இன்று திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் வைத்து காசோலைகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகமவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநரின் நிதியிலிருந்து மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் கோயிலுக்கு 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும், அதேபோன்று பொத்துவில் மத்திய கல்லூரிக்கு இரண்டரை இலட்சம் பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், வீதி அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரும், வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான யூ.எல்.ஏ.அஸீஸ், ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...