அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அமைதியின்மையை ஏற்படுத்திய நால்வருக்கு நேர்ந்த நிலை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தி அமைத்தியின்மையை ஏற்படுத்திய நால்வரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் நயீம் இன்று உத்தரவிட்டார்.

மூதூர் ஸாபி நகர், ஆலீம் நகர், பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த 41, 46, 27 மற்றும் 21 வயதுடைய நாலேவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கடந்த செவ்வாய் கிழமை திருகோணமலை மட்டக்களப்பு வீதியின் பெரிய பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதூர் ஆலீம் நகரைச் சேர்ந்த எம்.மஹ்சூன் வயது (28) என்பவர் ஸ்தலத்திலே உயிரிழந்தார்.

மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனம் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மேற்படி நபர் மீது மோதியதாலேயே இவ்விபத்து நிகழ்ந்ததாகவும், இவ்விபத்தினை கண்டித்து சந்தேக நபர்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றதோடு, வீதிகளில் டயர்களையும் தீ மூட்டி அரச சொத்துகளையும் சேதப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் நால்வரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் (வாசஸ்தலத்தில்) முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் மூதூர் பிரதேச சபையின் சுயட்சைக்குழு உறுப்பினர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் இன்னும் பலர் தொடர்பு பட்டிருப்பதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...