இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பாட்டாளிபுரம் நூலகக் காணி பிரதேச செயலாளரிடம் கையளிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள பாட்டாளிபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்திருந்த பொது நூலகத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 13 பேர்ச் அளவான காணி யுத்தத்தின் பின்னர் 2006ஆம் ஆண்டு முதல் இராணுவ முகாம் அமையப்பெற்று இராணுவத்தின் கீழ் இருந்து வந்தது.

இக்காணியினை மீண்டும் மக்களது நூலகப் பாவனைக்கு கையளித்தல் தொடர்பாக ஜனாதிபதியினுடைய விசேட அறிவித்தலுக்கிணங்க கடந்த 2018.12.10ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இராணுவத்திடமிருந்து குறித்த காணியில் இராணுவ முகாம் அகற்றப்பட்டு பொது நூலகத்திற்காக காணி விடுவிக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைவாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளையிடும் அதிகாரி திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார அவர்களிடம் கையளித்ததற்கு அமைவாக அதன் பின்னணியில் கல்லாறு இராணுவ கட்டளையிடும் அதிகாரி மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக் அவர்களிடம் கடந்த வியாழக் கிழமை பிரதேச செயலாளரினுடைய அலுவலகத்தில் குறித்த காணியினை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதன்போது மூதூர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. நிசவ்ஸ் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் என். கஜகோகுலன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...