வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கி வைப்பு!

Report Print Mubarak in சமூகம்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் திருகோணமலை மாவட்டத்தின் பதினொரு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று திருகோணமலை நகரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

வீடில்லாதவர்கள் மற்றும் மலசலகூட வசதி இல்லாதவர்களுக்குமான உதவி வழங்கும் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இதன் போது காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகம, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்துள்ளனர்.

Latest Offers