பாடசாலை விடுமுறையை கழிப்பதற்காக பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைசேனை பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயது இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்றைய தினம் மூதூர் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலை விடுமுறையை கழிப்பதற்காக திருகோணமலையிலிருந்து தமது பாட்டியின் வீட்டுக்கு வந்த 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சம்பூர் பொலிஸாரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் சம்பூர், கடற்கரைசேனை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers