மன்னாரின் பல கிராமங்களினுள் சென்றுள்ள கடல் நீர்!! அச்சத்தில் மக்கள்..

Report Print Ashik in சமூகம்

வடக்கின் முக்கிய மாவட்டமான மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில கிராமங்களில் இன்று காலை 6 மணியில் இருந்து கடல் நீர் புகுந்து வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், சௌத்பார், எமில் நகர், ஜிம்ரோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டிக்கோட்டு கிழக்கு, மேற்கு ஆகிய கிராமங்களினுள் கடல் நீர் படிப்படியாக செல்ல ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

மன்னார், புதையிரத வீதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஊடாகவே கடல் நீர் கிராமங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட கிராமங்களின் கிராம அலுவலகர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

எனினும் இந்த விடயம் குறித்து மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கிராமங்களுக்குள் கடல் நீர் வருவதை கட்டுப்படுத்தாது விட்டால் வீடுகள் அனைத்தும் கடல் நீரால் ஆக்கிரமிக்கப்படும் அபாய நிலை ஏற்படலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Latest Offers