தெஹிவளையில் கைதான வெளிநாட்டுப் பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Report Print Steephen Steephen in சமூகம்

388 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பெண்ணுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புகள் இருப்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள பங்களாதேஷ் பெண் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தெஹிவளை காலி வீதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்த பெண் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து அந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பின்னர், பெண் வாடகைக்கு தங்கியிருந்த இரத்மலானை தொல்கஹாவத்த வீதியில் உள்ள வீடு சோதனையிடப்பட்டது.

அப்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 31.329 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. முழு ஹெரோயின் தொகையின் பெறுமதி 388 மில்லியன் ரூபாய். சுர்ஜோ மோனி என்ற 23 வயதான பங்களாதேஷ் பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து இரத்மலானையில் உள்ள வீட்டில் வசித்து வரும் இந்த பெண், அடிக்கடி பங்களாதேஷ் சென்று வந்துள்ளார்.

இந்த பெண் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தும் நடவடிக்கை முக்கிய புள்ளியாக இருக்கலாம் என்பதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன.

அதேவேளை நுகேகொடை - பாகொட வீதியில் 121 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சந்தேக நபர்களுக்கு இந்த பங்களாதேஷ் பெண்ணே போதைப் பொருளை வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Latest Offers